பள்ளிகள் நாளைமறுதினம் திறப்பு: வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரம்


பள்ளிகள் நாளைமறுதினம் திறப்பு: வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரம்
x

பள்ளிகள் நாளைமறுதினம் திறக்கப்படுவதையொட்டி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கரூர்

கோடை விடுமுறை

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதியுடனும், பிளஸ்-1 வகுப்புகளுக்கு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந்தேதியுடனும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடனும் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று ஏப்ரல் மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்தது. பின்னர் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையில் இருக்கின்றனர். இந்நிலையில் ஜூன் மாதம் 1-ந்தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

சுத்தம் செய்யும் பணி

இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதியை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 14-ந்தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 12-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கரூரில் உள்ள பள்ளி வகுப்பறை களை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கரூர் மாநகராட்சி ஊழியர்கள் பள்ளி வகுப்பறைகள், வளாகத்தையும் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் அமரும் மேஜைகளையும் சுத்தம் செய்தனர்.


Next Story