!-- afp header code starts here -->

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு


1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 14 Jun 2023 3:04 AM IST (Updated: 14 Jun 2023 2:47 PM IST)
t-max-icont-min-icon

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பெரம்பலூர்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளது.

மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் வகுப்புகள் தொடக்கத்திற்காக பள்ளி தரப்பிலும் காத்திருந்தனர். இதேபோல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு முதன் முதலாக அனுப்புவதில் பெற்றோரும் ஆர்வத்தோடு இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி தங்களது குழந்தைகளுக்கு தேவையான எழுதுபொருட்கள், காலணிகள், சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகளை வாங்கி தயாராக வைத்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளிலும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயாராக உள்ளது. மாணவ-மாணவிகளை வரவேற்க ஆசிரியர்களும் தயாராக உள்ளனர். சிறப்பு ஏற்பாடுகள் அந்தந்த பள்ளி தரப்பில் செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story