பள்ளிகள் நாளை மறுநாள் திறப்பு: தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


பள்ளிகள் நாளை மறுநாள் திறப்பு:  தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x

பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படுவதையொட்டி தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது

தேனி

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ளது. தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 937 பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகள் நாளை மறுநாள் திறக்க உள்ளதால் பள்ளிகளை சுத்தம் செய்து தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக வகுப்பறை, பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிகளில் நடந்து வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டார். பள்ளி வகுப்பறை, சமையல் அறை, கழிப்பிடம், குடிநீர் வசதி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளிகள் திறக்கும் முன்பு பள்ளியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.மேலும் பள்ளி அருகில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.


Next Story