பள்ளிகள் அறிவிக்கப்பட்ட தேதியில் திறக்கப்படும்
பள்ளிகள் அறிவிக்கப்பட்ட தேதியில் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை கிண்டியில் அரசு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி திறப்பதாக இருந்தது. இதனை மற்றொரு தேதியில் அவர் திறந்து வைப்பார். பள்ளிகள் திறப்பு பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அறிவிக்கப்பட்ட தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும். அதற்குள் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என நம்புகிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம் குறித்து விமர்சனம் செய்பவர்கள் பற்றி கேட்கிறீர்கள். தமிழகத்தின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்களின் விமர்சனத்திற்கு நான் பதில் சொல்லமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story