அறிவியல் கண்காட்சி


அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:45 PM GMT)

ஆக்கூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது

மயிலாடுதுறை

பொறையாறு:

ஆக்கூரில் உள்ள செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பயன்பாடற்ற கழிவுகளை கொண்டு மறுபயன்பாடு என்ற மையபொருளில் மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளின் அறிவியல் கண்காட்சி நடந்தது.. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார கல்வி அலுவலர் பூவராகவன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார். இதில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கலந்து கொண்டு குத்து விளகேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்கள், அவர்கள் உருவாக்கிய படைப்புகளின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினர். கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளத. அதில் சிறந்த 11 படைப்புகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்களும், 29 படைப்புகளுக்கு ஆறுதல் பரிசுகளும், சிறந்த பள்ளிக்கான விருதும் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிங்காரவேலு மற்றும் ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story