அறிவியல் கண்காட்சி


அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் சங்கம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் சுயம்புராஜன் தலைமை தாங்கி பேசினார். துணை தாளாளர் கமலா சுயம்புராஜன் வாழ்த்தி பேசினார். பள்ளி இயக்குனர் ரூகண்யா, அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் அலமேலு மாணவ-மாணவிகளை பாராட்டினார்.

மாணவ-மாணவிகள் அறிவியல் சங்கம் சார்பில் உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக 12-ம் வகுப்பு மாணவி ரோஷினி, துணைத்தலைவராக மாணவி நிஷானி ஆகியோர் தேர்வாகினர். மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை வைத்து, வினாடி-வினா, கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தினர். பொறுப்பாளராக ஆசிரியர் மூர்த்தி, ஆசிரியை ஜென்சி ஆகியோர் செயல்பட்டனர். முன்னதாக மாணவி ஹேமாவதி வரவேற்று பேசினார். முடிவில் மாணவி அபிநயா நன்றி கூறினார். மாணவி ஆரோக்கிய அக்‌ஷயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

திசையன்விளை சுபா சிறப்பு பல் மருத்துவமனை சார்பில் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச சிறப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது. பள்ளியின் இயக்குனர் ரூகண்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் டாக்டர்கள் விஜயபாரதி, சந்திரா, நியாஷ் மற்றும் பபிதா, நித்திஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பற்கள் பற்றி மருத்துவ ஆலோசனை மற்றும் தீர்வுகள் வழங்கினர்.


Next Story