அறிவியல் கண்காட்சி
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் நடைபெற்றது.
இளையான்குடி
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஜபருல்லாஹ்கான் மற்றும் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இயற்பியல் துறை மாணவ, மாணவிகள் அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர். இளையான்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சி குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், நசீர் கான், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ்கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கோளரங்கம் அமைக்கப்பட்டு கோள்களின் செயல்பாடுகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை தலைவர் முஸ்தாக் அகமது கான், உதவி பேராசிரியர்கள் கலில்அகமது, செய்யது அபுதாகிர், சங்கீதா ஆய்வக உதவியாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் செய்திருந்தனர்.