செயின் ஜோசப் குளோபல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- பொங்கல் விழா


செயின் ஜோசப் குளோபல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- பொங்கல் விழா
x

செயின் ஜோசப் குளோபல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- பொங்கல் விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களமேடு அருகே உள்ள எறையூர் செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் அறிவியல் பாட செயல்பாடுகளை, அறிவியல் ஆய்வு சிந்தனைகளையும் மாணவர்களுக்கு கற்பிக்கும் விதத்தில் பல்வேறு மாதிரிகள், சோதனைகள், ஆய்வுகள், செயல் திட்டங்கள் கொடுக்கப்பட்டன. அதனை காட்சிப்படுத்தும் நிகழ்வாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை நிர்வாகி அந்தோணி மேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சந்தனசேகர் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். மேலும் இளம் விஞ்ஞானிகளாக வளர வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் கோதை, கீதா மற்றும் கலையரசி ஆகியோர் செய்திருந்தனர். இக்கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். முன்னதாக 8-ம் வகுப்பு மாணவி காலிதா பானு வரவேற்றார். முடிவில் 9-ம் வகுப்பு மாணவி சீதாபிராட்டி நன்றி கூறினார்.

இதையடுத்து பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனி பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பொங்கலின் சிறப்பு பற்றி நித்யா பேசினார். எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வழியாக பொங்கலின் சிறப்பை வெளிப்படுத்தினர். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழக பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.


Next Story