அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி


அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏரிப்பட்டி, தொப்பம்பட்டி அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

ஏரிப்பட்டி, தொப்பம்பட்டி அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின கண்காட்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கீதா கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதையொட்டி மாணவ-மாணவிகள் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்திருந்தனர். மேலும் சர்.சி.வி.ராமனின் நிறப்பிரிகை சோதனை முப்பட்டகத்தை வைத்து சூரிய ஒளி அதன் மீது படும்படி செய்து ஏழு வண்ணங்களாக நிறப்பிரிகை அடைந்து வானவில் நிறம் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும்படி செய்து காண்பிக்கப்பட்டது.

கண்காட்சியில் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளாக துணிப்பை, மஞ்சப்பை, ஓயர் கூடை, சில்வர் டம்ளர் தட்டு, காகிதப்பை ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன. முடிவில் ஆசிரியை ஸ்வர்ணா ஆசிரியை நன்றி கூறினார்.

அறிவியல் கண்காட்சி

பொள்ளாச்சியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின படைப்புகள் மற்றும் கலைப்பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. வடக்கு வட்டார கல்வி அலுவலர் யோகேஸ்வரி தலைமை தாங்கி, கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்று பேசினார். 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அறிவியல் மாதிரிகள் மற்றும் தாங்கள் செய்த படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். சூரிய மின் கலம், காற்றாலை, எரிமலை, சாலை விதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, உடலுக்கு நன்மை தரும் உணவுகள் என பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. 1-ம் வகுப்பு மாணவன் வெற்றிவேல் ஆதிவாசியாக கண்காட்சிக்கு மாறுவேடத்தில் வந்து அசத்தினார். ஆசிரியர்கள் மகாலட்சுமி, தேவி, உஷா, மனுவேல்ராஜன் ஆகியோர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோரஞ்சிதம் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story