அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா
ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது.
நாமக்கல்
ராசிபுரம்
ராசிபுரம் ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வானவில் மன்ற கருத்தாளர்கள் கவிதா மற்றும் திலகவதி ஆகியோர் நமது அன்றாட பயன்பாட்டில் நிகழும் சம்பவங்கள் உள்ள அறிவியல் உண்மைகளை குழந்தைகளுக்கு விளக்கி கூறினர். எளிய முறையில் அறிவியல் சோதனை செய்து காட்டப்பட்டது. இதில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story