அப்துல்கலாம் சிலையுடன் அறிவியல் பூங்கா


அப்துல்கலாம் சிலையுடன் அறிவியல் பூங்கா
x
தினத்தந்தி 15 Jun 2023 1:00 AM IST (Updated: 15 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை டாடாபாத் பகுதியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது

கோயம்புத்தூர்

கோவை

கோவை டாடாபாத் பகுதியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை, ராக்கெட் வடிவம், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவையும், அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, பெரிய கடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.7.48 கோடி மதிப்பில் 1.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோட்டார் இல்லாத வாகனப் போக்குவரத்து திட்டத்தில் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியா ளர் புவனேஸ்வரி, உதவிப் பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மாநக ராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story