பஸ் மீது ஸ்கூட்டர் மோதல்


பஸ் மீது ஸ்கூட்டர் மோதல்
x

குளச்சலில் நின்ற பஸ் மீது ஸ்கூட்டர் மோதல்

கன்னியாகுமரி

குளச்சல், -

குளச்சல் அருகே உள்ள நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய நண்பர் சேது. இவர்கள் இருவரும் குளச்சல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது தேர்வு முடிந்த நிலையில் இருவரும் நண்பர்களை சந்திப்பதற்காக ஸ்கூட்டரில் திங்கள்சந்தையில் இருந்து குளச்சலுக்கு வந்தனர். ஸ்கூட்டரை சேது ஓட்டினார். சக்திவேல் பின்னால் அமர்ந்து இருந்தார். அவர்கள் உடையார்விளை பகுதியில் சென்றபோது, திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்னால் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் ஸ்கூட்டர் பஸ்சின் பின் பக்கத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. மாணவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story