பஸ் -லாரி இடையே சிக்கிய ஸ்கூட்டர்


பஸ் -லாரி இடையே சிக்கிய ஸ்கூட்டர்
x

திருவட்டார் அருகே பஸ் -லாரி இடையே ஸ்கூட்டர் சிக்கியது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

குளச்சலில் இருந்து திருவட்டார் வழியாக பேச்சிப்பாறைக்கு நேற்று காலையில் ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திருவட்டார் அருேக உள்ள புத்தன்கடையில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டரும், டாரஸ் லாரியும் ஒரே நேரத்தில் பஸ்சை முந்தி செல்ல முயன்றன. திடீரென லாரி, ஸ்கூட்டர் மீது உரசியது. இதில் ஸ்கூட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்து பஸ்சுக்கும், லாரிக்கும் இடையே சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த நீரோடியைச் சேர்ந்த மீனவர் ஸ்டீபன் (வயது 56) படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குலசேகரம் மற்றும் சித்திரங்கோட்டில் இருந்து காலை, மாலை நேரங்களில் டாரஸ் லாரிகள் இயக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த ேநரங்களில் லாரிகள் இயக்குவதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story