ஸ்கூட்டர் திருட்டு


ஸ்கூட்டர் திருட்டு
x

ஸ்கூட்டர் திருட்டு போனது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெற்குகோட்டை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மனைவி மகரஜோதி (வயது42). இவர் சம்பவத்தன்று இரவு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் இந்த ஸ்கூட்டரை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மகரஜோதி கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story