Normal
கூடுதல் கலெக்டரின் ஸ்கூட்டர் திருட்டு
கூடுதல் கலெக்டரின் ஸ்கூட்டர் திருட்டு போனது
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா கடந்த 28-ந் தேதி தனது ஸ்கூட்டரை மருத்துவக்கல்லூரி சாலை நடராஜபுரம் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே நிறுத்திவிட்டு, டென்னிஸ் விளையாடுவதற்காக சென்றார். விளையாடி முடித்த பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. யாரோ ஸ்கூட்டரை திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் சுகபுத்ரா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே மோட்டார் சைக்கிள்கள் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story