கரூரில் சுட்டெரிக்கும் வெயில்


கரூரில் சுட்டெரிக்கும் வெயில்
x

கரூரில் சுட்டெரிக்கும் வெயிலால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கரூர்

சுட்டெரிக்கும் வெயில்

கோடை காலம் எனப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயில் உக்கிரம் உச்சத்தை தொடும். இந்த காலத்தில் தான் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒருசில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அந்தவகையில் கரூரிலும் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது.

இதனால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். அவ்வப்போது மழை வருவது போன்று இருந்தாலும், மழை பெய்யவில்லை. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்லமுடியாத அளவிற்கு வெயில் உள்ளது.

வெப்பத்தின் அளவு அதிகரிப்பு

இந்நிலையில் கரூரில் நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் அளவு அதிகரித்து கடுமையாக இருந்தது. சாலைகளில் கானல்நீர் தெரிந்தது. வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள சாலைகளில் குடைபிடித்தப்படி சென்றனர். சிலர் தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டால் போர்த்தியபடியும் சென்றனர்.

வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றி கொண்டு சென்றனர். மேலும் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் வியர்வையில் நனைந்தனர். இதற்கிடையில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழச்சாறுகளை அருந்தினர். மேலும் தர்பூசணி பழங்கள், நுங்கு உள்பட பல்வேறு பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.


Next Story