ஸ்காட் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா


ஸ்காட் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
x

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 22-வது ஆண்டு விழா நடந்தது. கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக ஊக்கமூட்டும் பேச்சாளர் ஜெகன், வெர்சுசா திட்ட மேலாளர் பெர்ரோ விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கல்லூரி முதல்வர் ஜஸ்டின் திரவியம் ஆண்டறிக்கையையும், பொது மேலாளர் தம்பிதுரை, கல்லூரி அட்மிஷன் இயக்குனர் ஜான் கென்னடி ஆகியோர் மாணவர்கள் சிறந்த முறையில் பயின்று வாழ்வில் முன்னேற வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கும், சிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜெயபாண்டி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.


Next Story