சாரணர் பொதுக்குழு கூட்டம்
சாரணர் பொதுக்குழு கூட்டம் நடந்தது
சிவகங்கை
சிவகங்கை சாரணர் கல்வி மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டம் சோழபுரம் ரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார் (இடைநிலை), பொன் விஜயன், சரவண முருகன் (தனியார் பள்ளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட சாரணர் அமைப்பின் தலைவராக புவனேஷ்வரனும், செயலாளராக முத்துக்குமரனும், பொருளாளராக நாகராஜனும், கவுரவ ஆலோசகர்களாக கற்பூர சுந்தரபாண்டியன், பகீரதநாச்சியப்பன், கவுரவ தலைவராக தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில் திருத்திய சோபன் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாவதி வழங்கி பேசினார். கூட்டத்தில் சிவகங்கை கல்வி மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், சாரண, சாரணிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சாரண இயக்க அமைப்பு ஆணையர் நரசிம்மன் நன்றி கூறினார்.