மசாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து
மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மசாஜ் செய்ய மறுப்பு
கோவை சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் மேற்கு வீதியில் வசிப்பவர் மினிமோள் (வயது43). கேரளாவை சேர்ந்த இவர், சூலூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு கவுசிக் (21) என்பவரும், அவரது நண்பரும் சென்றனர். தொடர்ந்து தங்கள் இருவருக்கும் மசாஜ் செய்து விட வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மினிமோள் 'வீட்டில் மசாஜ் செய்வதில்லை. சூலூர் மசாஜ் சென்டருக்கு வந்தால் மசாஜ் செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.
பெண்ணுக்கு கத்திக்குத்து
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவுசிக்கும், உடன் வந்த வாலிபரும் மினிமோளை தாக்கினர். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மினிமோளை குத்தினர். இதில் அவருக்கு தலை, கை பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
இதற்கிடையில் கவுசிக்கும் அவரது நண்பரும் தப்பியோடிவிட்டார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மினிமோளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.