சேலம் கோரிமேட்டில்கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டுடிரைவர் உள்பட 4 பேர் கைது


சேலம் கோரிமேட்டில்கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டுடிரைவர் உள்பட 4 பேர் கைது
x
சேலம்

கன்னங்குறிச்சி

சேலம் கோரிமேட்டில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளத்தொடர்பு

மதுரை மாவட்டம் ஆனையூர் நகர மருத்துவமனை பின்புறம், வசித்து வருபவர் இளங்கோவன் (வயது44). டிரைவர். இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் சூரமங்கலத்தை சேர்ந்த வக்கீல் செந்தில்குமாருக்கும், இளங்கோவனின் மனைவி ஜோதிக்கும் முன்பு கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இளங்கோவனுக்கும், செந்தில்குமாருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் கோரிமேட்டுக்கு வந்து வக்கீல் செந்தில்குமாரை, இளங்கோவன் உள்பட சிலர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

4 பேர் கைது

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மடக்கி பிடித்து கன்னங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் இளங்கோவன், மணிகண்டன், சிக்கந்தர்பாஷா, ஆனந்தபாபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காயம் அடைந்த செந்தில்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து இளங்கோவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இளங்கோவன் மீது சேலம் மாநகரம், அம்மாபேட்டை போலீஸ் நிலையம் மற்றும் மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 7 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கைதான இளங்கோவன் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story