டிரைவருக்கு அரிவாள் வெட்டு; லாரி உரிமையாளர் கைது


டிரைவருக்கு அரிவாள் வெட்டு; லாரி உரிமையாளர் கைது
x

நாமக்கல்லில் டிரைவரை அரிவாளால் வெட்டிய லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

அரிவாள் வெட்டு

நாமக்கல் டவுன் நாகராஜபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அருள் (வயது 52). இவர் சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கோபால் (42). இவர் மராட்டியத்தில் இருந்து பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு லாரியை வீட்டின் அருகே சாலையில் நிறுத்தி இருந்தார்.

அப்போது அந்த வழியாக லாரியில் வந்த டிரைவர் அருள், கோபாலிடம் லாரியை இடையூறாக நிறுத்திவிட்டதாக கூறி கேட்டதாக கூறப்படுகிறது. அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த டிரைவர் அருள், லாரியில் இருந்த அரிவாளை எடுத்து கோபாலின் கையை வெட்டியுள்ளார். வலி தாங்க முடியாமல் கோபால் அலறி துடித்து கூச்சலிட்டுள்ளார்.

கைது

இதையடுத்து அங்கு திரண்ட அந்த பகுதி பொதுமக்கள் கோபாலை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லாரி உரிமையாளர் அருளை கைது செய்தனர்.


Next Story