பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
சுத்தமல்லி அருகே பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பேட்டை:
நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம், நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பத்மநாதன் (வயது 34). இவர் நெல்லை டவுனில் பூக்கடை நடத்தி வருகிறார். கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜூன் மகன் சங்குமணி (28). கொலை வழக்கு தொடர்பாக பத்மநாதன் மற்றும் சங்குமணி தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பத்மநாதன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சங்குமணி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கும்பல் வீடு புகுந்து பத்மநாதனை கம்பு மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பத்மநாதனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்குமணி உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.