வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
திசையன்விளையில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திசையன்விளை:
திசையன்விளை தங்கம் திருமண மண்டப தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 45). வியாபாரி. இவருக்கும், உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயன் (45) என்பவர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கிறிஸ்துதாஸ் மகன் சூரியா, விஜயன் வீட்டு முன்பு சென்றுள்ளார். இதை பார்த்த விஜயன் மற்றும் அவரது உறவினர்கள் சூரியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிறிஸ்துதாஸ் இதுபற்றி விஜயனிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயன், அதே தெருவை சேர்ந்த ஜோயல் (20) மற்றும் 5 பேர் சேர்ந்து கிறிஸ்துதாசை அரிவாளால் வெட்டியதாக திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயன் உள்பட 7 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.