தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

ராஜபாளையம் அருகே கோவிலில் வழிபாடு சம்பந்தமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டினர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே கோவிலில் வழிபாடு சம்பந்தமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டினர்.

அரிவாள் வெட்டு

ராஜபாளையம் அருகே மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோதை நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. பிரச்சினை தொடர்ந்து நடைபெற்றதால் கோவில் இருக்கும் இடத்தில் போலீசார் நிரந்தர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரு பிரிவை சேர்ந்த மில் தொழிலாளி தங்கப்பாண்டியன் (வயது 32) என்பவர் வேலைக்கு செல்லும் போது மற்றொரு பிரிவை சேர்ந்த 3 பேர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதையடுத்து தங்கப்பாண்டியனை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே தங்கப்பாண்டியனை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி, இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வாக்குவாதம்

அப்போது அவர்கள் 3 நபர்களை குறிப்பிட்டு அவர்களை கைது செய்யக்கோரி போலீசாரிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story