தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
x

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குபட்டியை சேர்ந்தவர் ரெங்கதுரை (வயது 45). தொழிலாளி. இவரது உறவினரான ரெங்கசாமி மகன் கருப்பையா (25). இவர்கள் இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பையாவுக்கும், ரெங்கசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதைப்பார்த்த ரெங்கதுரை இதுகுறித்து தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கருப்பையா அரிவாளை எடுத்து ரெங்கதுரையை வெட்டி உள்ளார். இதில் ரெங்கதுரைக்கு வலது கையில் உள்ள 2 விரல்கள் துண்டாகி விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் துண்டான விரல்களை தனி ஐஸ்பெட்டியில் அடைத்து, ரெங்கதுரையை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பையாவை கைது செய்தனர். பின்னர் கருப்பையாவை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story