தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு:தந்தை-மகன் கைது
தேவதனாப்பட்டி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பரமன் (வயது 63). கூலித்தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த சக்திவேல் மகன் கணேசன் (23). ஆட்டோ டிரைவர். கடந்த 14-ந்தேதி பரமன், சக்திவேலிடம் அவரது மகன் கணேசனை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பரமன் மற்றும் கணேசன், சக்திவேல் ஆகியோர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து பரமனை அரிவாளால் வெட்டினர். பரமனும் கணேசனை தாக்கினார். இதையடுத்து படுகாயம் அடைந்த பரமனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் ஜெயமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதில் கணேசன் சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.