பெண்ணுக்கு அரிவாள்மனை வெட்டு
நெல்லிக்குப்பம் அருகே பெண்ணுக்கு அரிவாள்மனை வெட்டு கணவர் கைது
கடலூர்
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் அருகே உள்ள எழுமேடு அகரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 57). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா(42). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அம்பிகா, கடந்த 3 ஆண்டாக பில்லாலித்தொட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன், அம்பிகா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்த அரிவாள்மனையால் அம்பிகாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அம்பிகா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story