பலசரக்கு கடைக்காரரை அரிவாளால் வெட்டிய கும்பல்
மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் பலசரக்கு கடைக்காரரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் பலசரக்கு கடைக்காரரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரிவாளால் வெட்டு
சிவகங்கை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் மனோபாலா (வயது 31). இவர் அஜித் ரோடு பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டி என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு மனோபாலா தர மறுத்து விட்டாராம்.
இதனால் சம்பவத்தன்று இரவு டி.புதுரை சேர்ந்த அனுப்பாண்டி மற்றும் அழகு பாண்டி உள்பட 3 பேர் மனோபாலாவின் கடைக்கு சென்று அவருடன் தகராறு செய்தனர். பின்னர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோபாலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் பலசரக்கு கடைக்காரரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சி.பி.சாய் சவுந்தர்யன், நகர் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகை கடைக்காரரை அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.