வாடகை பணத்தை கேட்டகார் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டுஅண்ணன்-தம்பி கைது
வாடகை பணத்தை கேட்டகார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
தலைவாசல்,
தலைவாசலை அடுத்த ஊனத்தூர் வடக்கு காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). இவருக்கு சொந்தமான காரில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊனத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (28), சிவா (20) ஆகியோர் குடும்பத்துடன் வாணியம்பாடிக்கு சென்று வர ரூ.5 ஆயிரத்து 500 பணம் பேசி கார் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதில் ஏற்கனவே 4 ஆயிரம் கொடுத்துள்ளனர் மீதி பணத்தை கேட்க வெங்கடேசன் சென்ற போது தகாத வார்த்தையால் பேசியதுடன் அவரை மணிகண்டன் அரிவாளால் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வெங்கடேசனின் தம்பி சிவாவும் வெங்கடேசனை தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஷ், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன், அவருடைய தம்பி சிவா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பதிவு செய்தனர்.