எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நேற்றுமுன்்தினம் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி நிர்வாகிகளை கைது செய்தனர். இதனை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட கட்சியினர் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா கைது செய்யப்பட்டதை கண்டிதது அரசு பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைைம தாங்கினார். கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், பாப்புலர் பிரிண்ட் ஆப் இந்தியா மாவட்ட பேச்சாளர் ஹமீது இப்ராகிம், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முகைதீன், ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ஆரிபு நன்றி கூறினார்


Related Tags :
Next Story