கடல் அரிப்பை தடுக்க சவுக்கு மரக்கன்றுகள் நடப்படுமா?


கடல் அரிப்பை தடுக்க சவுக்கு மரக்கன்றுகள் நடப்படுமா?
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:45 PM GMT)

வாலிநோக்கம் முதல் மாரியூர் வரையிலான கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சவுக்கு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

வாலிநோக்கம் முதல் மாரியூர் வரையிலான கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சவுக்கு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நீரோட்டம் அதிகம்

தமிழகத்தின் மொத்த கடவாலிநோக்கம் முதல் மாரியூர் வரையிலான கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சவுக்கு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.ற்கரை சுமார் 1200 கிலோமீட்டர் நீளமுடையது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி மிக நீண்ட நெடிய கடற்கரை பகுதியாகும். மாவட்டத்தில் மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி இரண்டு கடல் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். இதில் மன்னார் வளைகுடா கடல் பகுதி இயற்கையாகவே கடல் நீரோட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் முதல் கீழமுந்தல், மேலமுந்தல், மாரியூர் வரையிலான கடற்கரை ஒட்டிய மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த 4 மீனவ கிராமங்களில் மட்டும் மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 3,000 மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுபோல் சுமார் 300-க்கும் அதிகமான மீன்பிடி படகுகளும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே மன்னார் வளைகுடாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த வாலிநோக்கம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் அதிகமாக உள்ளது.

கடல் அரிப்பு

இதன் காரணமாக கடல் நீரானது கடற்கரை பகுதிகள் முழுவதுமாக இருந்த மணல் பரப்பை அரித்து வருகின்றன. கடல் நீரால் மணல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை பகுதிகளின் நீளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வாலிநோக்கம் முதல் முந்தல், மாரியூர் வரையிலான கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

வாலிநோக்கம் முதல் மாரியூர் வரையிலான கடற்கரை பகுதிகளில் சவுக்கு மரங்கள் அதிக அளவில் இல்லாததும் கடல் அரிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. எனவே, இந்த கடற்கரை பகுதிகளில் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி கடல் அரிப்பை தடுக்கும் வகையில் சவுக்கு மர கன்றுகள், பனை மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுக்கு மரக்கன்றுகள்

இதுகுறித்து கீழமுந்தல் மீனவர் கதிரேசன் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாகவே இந்த கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் அதிகமாகவே உள்ளது. மிக நீண்ட மணல் பரப்புடன் இருந்த இந்த கடற்கரை பகுதிகள் தற்போது கடல் அரிப்பால் அதன் பரப்பளவு குறைந்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மணல் பரப்பே இல்லாத நிலை உருவாகும். கடல் அரிப்பை தடுக்கும் வகையில் இந்த கடற்கரை பகுதிகளில் வனத்துறை மூலம் பனைமர விதைகள் தூவுவதற்கும் மற்றும் சவுக்கு மரக்கன்றுகள் நடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் தூண்டில் வளைவு கட்டி தரவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கீழமுந்தல் மீனவர் சுப்பிரமணியன்:- இந்த 4 மீனவ கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை இப்பகுதிகளில் தூண்டில் வளைவு ஒன்று கட்டித்தர வேண்டும் என்பதுதான். தூண்டில் வளைவு கட்டப்படும் பட்சத்தில் கடல் அலைகளின் வேகம் கட்டுப்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல் மீன்பிடி படகுகளையும் பாதுகாப்பாக நிறுத்த வசதியாக இருக்கும். அதனால் இந்த கடல் பகுதியில் தூண்டில் வளைவு கட்டி தருவதற்கும், கடற்கரை பகுதிகளை பாதுகாக்கும் வகையிலும், கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும் சவுக்கு மரக்கன்றுகளை நடுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story