குமரியில் கடல் சீற்றம் நீடிப்பு;கொட்டில்பாடு, தென்பாற்கடற்கரை கடலரிப்பால் பாதிப்பு


குமரியில் கடல் சீற்றம் நீடிப்பு;கொட்டில்பாடு, தென்பாற்கடற்கரை கடலரிப்பால் பாதிப்பு
x

குமரியில் கடல் சீற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால் கொட்டில்பாடு, தென்பாற்கடற்கரை பகுதியில் கடலரிப்பால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

கன்னியாகுமரி

குளச்சல்,

குமரியில் கடல் சீற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால் கொட்டில்பாடு, தென்பாற்கடற்கரை பகுதியில் கடலரிப்பால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

கடல் சீற்றம்

குமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, சைமன் காலனி, வாணியக்குடி, கோடிமுனை, குறும்பனை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று இரவு கடல் சீற்றமாக இருந்தது.

இதில் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு உருவானது. இதனால் அங்கு ஒரு பெரிய பள்ளம் உருவாகி வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் நகர்மன்றத் தலைவர் நசீர், நகராட்சி பொறியாளர் ஜீவா, சுகாதார ஆய்வாளர் தங்க பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கோவில் சுற்றுச்சுவர் சேதம்

இதேபோல் ராஜாக்கமங்கலத்தை அடுத்த தெக்குறிச்சி பகுதியில் தென்பாற்கடற்கரையில் பழமையான கடற்கன்னி விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு அளத்தங்கரை, முருங்கவிளை, தெக்குறிச்சி, கணபதிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அரிப்பு ஏற்பட்டு இக்கோவின் ஒருபுற சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. மேலும் கோவிலின் அடித்தளமும் மண் அரிப்பினால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த கோவிலை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story