ேகாவிலுக்கு சீல் வைப்பு


ேகாவிலுக்கு சீல் வைப்பு
x

ராஜபாளையம் அருகே இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ேகாவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் ஒரே பிரிவினர் இரு தரப்பாக உள்ளனர். வழிபாடு மற்றும் திருவிழா நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் முறை வைத்து இருதரப்பினருக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் சாவியை ஒரு தரப்பினர் வழங்க மறுத்ததால் ஊர் மத்தியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் பூசாரியை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதை மற்றொரு தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது குறித்து முடிவு எட்டப்படும் வரை கோவில் சாவியை வருவாய் துறையினரிடம் அளிக்க வேண்டும் என்பதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு நேற்று துணை தாசில்தார் கோதண்டராமன் தலைமையிலான வருவாய் துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.

அப்போது அங்கு வசிக்கும் மக்கள் கோவிலுக்கு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. சேத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story