வணிக வளாகத்தில் இயங்கிய 17 கடைகளுக்கு 'சீல்'


வணிக வளாகத்தில் இயங்கிய 17 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 29 Aug 2023 3:45 AM IST (Updated: 29 Aug 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சிக்கு வாடகை பாக்கி உள்பட ரூ.9 கோடி நிலுவை தொகை செலுத்தாததால் 17 கடைகளை மூடி அதிகாரிகள் அதிடியாக ‘சீல்’ வைத்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சிக்கு வாடகை பாக்கி உள்பட ரூ.9 கோடி நிலுவை தொகை செலுத்தாததால் 17 கடைகளை மூடி அதிகாரிகள் அதிடியாக 'சீல்' வைத்தனர்.

வாடகை பாக்கி

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் உரிய வாடகை செலுத்த வேண்டும் என்றும், வாடகை செலுத்தாத கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாநகரம் முழுவதிலும் உள்ள மாநகராட்சி கடைகள் வாடகை பாக்கி குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ரூ.9 கோடி நிலுவை தொகை

கோவை-அவினாசி சாலை உப்பிலிபாளையம் சந்திப்பு பகுதியில், பாஸ்போர்ட் அலுவலகம் அருகே மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு 17 கடைகள் மாத வாடகை முறையாக செலுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கூறும்போது, இந்த வணிக வளாகத்தில் உள்ள 17 கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கியாக ரூ.4 கோடியும், சேவை வரி, அபராத கட்டணம் ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.9 கோடி நிலுவை தொகை செலுத்தாமல் இருந்தனர். இதுகுறித்து உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து இந்த தொகையை செலுத்த தாமதம் ஆனதால் நேற்று 17 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. இதில் 2 கடை உரிமையாளர்கள் கடைக்குள் இருந்துகொண்டு வெளியே வர மறுத்தனர். போலீஸ் உதவியுடன் அவர்களையும் வெளியேற்றி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story