வந்தவாசியில் ஹான்ஸ், குட்கா விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
வந்தவாசியில் ஹான்ஸ், குட்கா விற்ற 2 கடைகளுக்குஅதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வந்தவாசி
வந்தவாசியில் ஹான்ஸ், குட்கா விற்ற 2 கடைகளுக்கு 'சீல்' அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
வந்தவாசி சீதாராமன் நாயுடு தெருவில் ஜிக்மால்சிங் (வயது 26), விக்ரம்சிங் (32) ஆகியோர் அருகருகே பல்பொருள் விற்பனைக் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களது கடைகளில் வந்தவாசி தெற்கு போலீசார் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக ஜிக்மால்சிங், விக்ரம்சிங் ஆகிய இருவரையும் வந்தவாசி தெற்கு போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த 2 கடைகளுக்கும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் மற்றும் வந்தவாசி தெற்கு போலீசார், பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் அந்த இரு கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பு நோட்டீசும் அந்த கடைகளில் ஒட்டப்பட்டன.