அனுமதியின்றி செயல்பட்ட கட்டுமான பொருட்கள் கடைக்கு `சீல்'


அனுமதியின்றி செயல்பட்ட கட்டுமான பொருட்கள் கடைக்கு `சீல்
x

அனுமதியின்றி செயல்பட்ட கட்டுமான பொருட்கள் கடைக்கு `சீல்' வைக்கப்பட்டது.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், நவ.3-

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள ஆனந்த் நகரில் அபி பில்டிங் மெட்டீரியல் சப்பளையர் என்ற பெயரில் கட்டுமான உபயோக பொருட்களை வாடகைக்கு விடும் கடை உள்ளது. இந்த கடைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பொருட்களை ஏற்றுவதற்கு அதிக அளவில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. உபகரணங்களை ஏற்றிச்செல்லும் போது ஒருசில நேரங்களில் இரும்பு தட்டுகள் வாகனத்தில் இருந்து வழியில் விழுந்து அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதம் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளதாகவும், அனுமதியின்றி செயல்படும் இந்த கடையை மூட உத்தரவிட வேண்டி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதரணி தலைமையிலான அதிகாரிகள் அந்த கடையை மூடி சீல் வைத்தனர்.

1 More update

Next Story