வணிக வளாகத்துக்கு 'சீல்'


வணிக வளாகத்துக்கு சீல்
x

நெல்லையில், சொத்துவரி செலுத்தாத வணிக வளாகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றிற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், தீவிர வரிவசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாத நெல்லை மண்டலம் 22-வது வார்டு சேரன்மாதேவி ரோடு பேட்டை செக்கடி அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் மூடி 'சீல்' வைத்தனர்.

அதேபோல் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் 2 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனை நெல்லை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி வருவாய் அலுவலர் வடிவேல் முருகன், வருவாய் உதவியாளர்கள் சீனிவாசன், செல்லத்துரை, முனியசாமி, மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.


Next Story