இறைச்சி கடைக்கு 'சீல்'
இறைச்சி கடைக்கு ‘சீல்’
திருப்பூர்
வெள்ளகோவில் நகராட்சி தீத்தாம்பாளையம் பரப்புமேடு பகுதியில் இறைச்சிக்கழிவுகளை சாலையோரத்தில் கொட்டிய வாகனத்தை நேற்று பொதுமக்கள் துரத்தி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கோழி இறைச்சிக்கழிவுகளை சாலைகளில் கொட்டிய கடைகளுக்கு 'சீல'் வைத்தனர்.
இதுகுறித்து ஆணையர் கூறும்போது"நகராட்சி பகுதியில் செயல்பட்டுவரும் இறைச்சிக்கடைகளில் உள்ள கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவிப்பு தெரிவிக்கப்பட்டும் இது போன்ற செயலில் ஒரு சில இறைச்சி கடை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திறந்த வெளியில் கழிவுகளை கொட்டுவதனால் அருகில் வசிப்பவர்களுக்கு
துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் எனவும் அதற்கான நகராட்சி வாகனத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்றார்.