வாடகை செலுத்தாத கடைகளுக்கு `சீல்'


வாடகை செலுத்தாத கடைகளுக்கு `சீல்
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:47 PM GMT)

சின்னசேலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு `சீல்' பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் பேரூராட்சி பஸ் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமாக 28 கடைகள் மாத வாடைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பூ, டீ, மருந்து, எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட கடைகள், ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட கடைகளுக்கு வாடகைதாரர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் பலமுறை சென்று வாடகைதாரர்களிடம் வாடகை பாக்கியை கேட்டும் பணத்தை செலுத்த அவர்கள் முன்வராததால் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தலைமையில் ஊழியர்கள் வாடகை பாக்கி வைத்துள்ள 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அப்போது பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமரன், சரவணன், சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story