திருவிழா நடத்துவதில் தகராறு; கோவிலுக்கு 'சீல்'


திருவிழா நடத்துவதில் தகராறு; கோவிலுக்கு சீல்
x

பரமத்திவேலூர் அருகே திருவிழா நடத்துவதில் தகராறு; கோவிலுக்கு ‘சீல்’ அதிகாரிகள் வைத்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தையொட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் பகவதி அம்மன் கோவில் விழாவிற்காக ஊஞ்சபாளையத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவில், நன்செய்இடையாற்றில் உள்ள இராசா கோவில் மற்றும் அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட 3 கோவில்களில் இருந்து வேல் எடுத்து காவிரியாற்றில் நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வேல்களை வைத்து சிறப்பு பூஜை செய்து பகவதி அம்மன் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு ஊஞ்சபாளையத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஊர்கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ஏற்கனவே கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து வேல் எடுத்து வருவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு வந்த மோகனூர் தாசில்தார் ஜானகி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போலீசார் மற்றும் தாசில்தார் ஆகியோர் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சீல் வைத்து திருவிழா நடத்துவதற்கு தடை விதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story