கெட்டு போன கேக் விற்ற பேக்கரிக்கு சீல்


கெட்டு போன கேக் விற்ற பேக்கரிக்கு சீல்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கெட்டு போன கேக் விற்ற பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் ஒருவர் பிறந்த நாளுக்காக கேக் வாங்கிய போது, அந்த கேக்கில் பூஞ்சை படர்ந்து கெட்டுபோன நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த நபர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் அந்த பேக்கரிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன நிலையில் இருந்த 200 கிலோ கேக், தின்பண்டங்கள் மற்றும் திரும்ப பயன்படுத்திய 200 கிலோ எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடையின் மேல் மாடியில் கேக் தயாரிக்கும் கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கிருந்த தொழிலாளர்கள் முறையான கவசம் அணியாமல் பணியில் இருந்ததால் அந்த பேக்கரி கடைக்கு பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர்-மதுரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒருவர் பிரியாணி சாப்பிட்டதில் சிக்கன் பழையதாக இருந்ததாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகனிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டதில் பிரிட்ஜில் வைத்திருந்த சிக்கன் மற்றும் சாதத்தை எடுத்து அழித்தனர். மேலும் ஓட்டலில் உணவுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி சென்றனர்.மேலும் ஓட்டல், பேக்கரி 2 கடைகளிலும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story