திருக்கோவிலூர் அருகேமதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை; இறைச்சிக்கடைக்கு சீல்


திருக்கோவிலூர் அருகேமதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை; இறைச்சிக்கடைக்கு சீல்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட இறைச்சிக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள கோழி இறைச்சி விற்பனைக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த, கடையின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் மகன் அன்பரசன் (வயது 42) என்பவரை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட இறைச்சிக்கடைக்கு திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் சென்று திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.


Next Story