மது பிரியர்கள் பயன்படுத்திய காலி இடத்துக்கு சீல்


மது பிரியர்கள் பயன்படுத்திய காலி இடத்துக்கு சீல்
x
தினத்தந்தி 25 May 2023 11:36 PM IST (Updated: 26 May 2023 1:16 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் டாஸ்மாக் கடை அருகில் மது பிரியர்கள் பயன்படுத்திய காலி இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக விற்ற மதுவை வாங்கி குடித்து இரண்டு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகில் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள காலியிடத்தை மது பிரியர்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செங்கிஸ்கான், அந்த இடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

அதந்பேரில் கலால் தாசில்தார் பாஸ்கரன் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து அந்த இடத்தின் கேட்டை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். இதே போன்று தக்கோலம் பகுதியில் ஒரு இடத்தையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.


Next Story