மதுரையில் பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்


மதுரையில் பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்
x

மதுரையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.

மதுரை

மதுரையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.

பன் பரோட்டா

மதுரையையும், உணவையும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு வெளி மாவட்ட மக்கள், மதுரையில் உள்ள உணவுகளை விரும்பி உண்பது வழக்கம். அதிலும் அசைவ உணவுகள் என்றால் கூடுதல் விருப்பம். மதுரையில் என்னென்ன உணவுகள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும் என தேடிச்சென்று சாப்பிடும் உணவு பிரியர்களும் இருக்கின்றனர்.

மதுரை மாநகர் சாத்தமங்கலம் - ஆவின் சந்திப்பில் சாலையோரத்தில் பிரபல பன் பரோட்டோ கடை செயல்பட்டு வந்தது. .

கடந்த சில தினங்களாக இங்கு சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுவதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி, கடைக்காரர்களை எச்சரித்தனர். இருப்பினும் தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடைக்கு சீல்

இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று சீல் வைத்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராமன் பாண்டியன் கூறுகையில், "மதுரையில் பிரபலமான பன் பரோட்டா கடையில் தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதாகவும், சாலை ஓரத்தில் உள்ள வாகனங்களில் இருந்து வரும் தூசிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு சென்று இரண்டு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதன்பின்னரும் அதனை சரி செய்யாமல் இருந்த காரணத்தினால் அந்த கடைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் தரமற்ற முறையில் உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story