டாஸ்மாக் உள்பட 16 கடைகளுக்கு 'சீல்'


டாஸ்மாக் உள்பட 16 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வாடகை செலுத்தாததால் டாஸ்மாக் உள்பட 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் வாடகை செலுத்தாததால் டாஸ்மாக் உள்பட 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

கடைகளுக்கு 'சீல்'

வால்பாறை நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் நகராட்சி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு கடை வாடகையை நிலுவையின்றி செலுத்த வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தது. மேலும் வாடகை பாக்கி உள்ளவர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வாடகை பாக்கி செலுத்துவதற்கான காலக்கெடு முடிடைந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் நகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று, வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.

வாக்குவாதம்

நகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் கடையை வீட்டு வெளியே வர மறுத்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.இதில் ஒருவர் 3 கடைகளை ஏலம் எடுத்து, டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு விட்டிருந்தார். வாடகை செலுத்தாததால் டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையில் மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டதை அறியாத சில மதுபிரியர்கள் கடைக்கு முன் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

நடவடிக்கை தொடரும்

நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 16 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. வாடகை பாக்கி நிலுவை வைத்திருப்பவர்கள் உடனடியாக அதனை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி ஆணையாளர் பாலு தெரிவித்தார்.


Next Story