2 கடைகளுக்கு சீல் வைப்பு
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்குஞ சீல் வைக்கப்பட்டது.
சிக்கல்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி போலீசார் கீழ்வேளூர் அருகே குருக்கத்தி மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் முகைதீன் அப்துல் காதர் (வயது40), மற்றும் குருமணாங்குடி மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் கோபால் (70) ஆகிய 2 பேரின் கடைகளில் சோதனை செய்தனர். இதில் அந்த கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.முகைதீன் அப்துல் காதர், கோபால் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நாகை கலெக்டர் உத்தரவின் பேரில் மேற்கண்ட 2 கடைகளுக்கு நாகை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் 'சீல்' வைத்தனர்.