நெல்லையில் ஓட்டலுக்கு சீல் வைப்பு
நெல்லையில் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில் அருகே ஒரு தனியார் ஓட்டல் செயல்பட்டு வந்தது. இதை பழனி என்பவர் நடத்தி வந்தார். இந்த ஓட்டல் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் இருப்பதாக கூறி அதன் ஒரு பகுதியை நெடுஞ்சாலை துறையினர் கடந்த 2014-ம் ஆண்டு இடித்து விட்டனர்.
இதுகுறித்து பழனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நெடுஞ்சாலை துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சேகர் தலைமையில் ஊழியர்கள் நேற்று அந்த ஓட்டலுக்கு 'சீல்' வைக்கச் சென்றனர். உடனே ஓட்டல் உரிமையாளர்கள் ஓட்டலில் இருந்த பொருட்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அந்த ஓட்டலுக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story