நர்சரி பிரைமரி பள்ளிக்கு சீல் வைப்பு


நர்சரி பிரைமரி பள்ளிக்கு சீல் வைப்பு
x

நர்சரி பிரைமரி பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி குழுமணி அருகே கோப்பு மாரியம்மன் கோவில் அருகில் வைஜெயந்தி வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்தார். இந்த பள்ளி அருகே பெரிய மரக்கிளைகள் இருப்பதாலும், குழந்தைகளுக்கு சுகாதாரம், பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக கூறி இதனை குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று மாலை திருச்சி தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரி சந்திரசேகரன் மற்றும் சோமரசம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆதித்யா, குழுமணி பகுதி வருவாய் அதிகாரி வில்லியம்ஸ் மற்றும் ஊர் கிராம பொதுமக்கள் முன்னிலையில் தனியார் நர்சரி பிரைமரி பள்ளிக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனையறிந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். மேலும் சீல் வைக்கப்பட்ட பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி அருகில் உள்ள பள்ளியில் படிப்பை தொடரலாம் என்றும் தெரிவித்தனர்.


Next Story