ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு சீல்
ஆக்கிரமிப்பு கட்டிடத்தை மூடி உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் ஊழியர்கள் சீல் வைத்தனர்.
கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் எவை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கவுண்டம்பாளையம், ஆட்டோ நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து வர்த்தக கட்டிடம் இயங்கி வருவது தெரியவந்தது.
உடனே உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று அந்த கட்டிடத்தை மூடி சீல் வைத்தனர். அந்த கட்டிடம் செயல்பட்ட 4 சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
Next Story