வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்


வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்
x

வாடகை பாக்கி செலுத்தாத 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டத.

வேலூர்

வேலுார் மாநகராட்சிக்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளன. கடையின் உரிமையாளர்கள் பலர் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். மேலும் சொத்து வரியும் பலர் செலுத்தாமல் உள்ளனர்.

வரி வசூல் மற்றும் மாநகராட்சி கடைகளின் வாடகை வசூலை தீவிரப்படுத்த கமிஷர் ரத்தினசாமி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வரி இனங்கள் செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை செல்லுத்தா கடைகளையும் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும், வாடகை பாக்கி, வரிவசூல் செய்யும் பணியில் நேற்று தீவிரமாக நடைபெற்றது.

இதன்மூலம், நேற்று ஒரேநாளில் சொத்து வரியாக ரூ.21 லட்சம், குடிநீர் வரியாக ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.41 லட்சம் வசூலானது. மேலும், வாடகை பாக்கி வைத்திருந்த 17 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story